GUEST'S TESTIMONIALS
2010-2011 கல்வியாண்டில் மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு விருந்தினராக வருகைதந்தார் .
அவர் தம் உரையில் ...
பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளுக்குத் தன்னைப் பற்றி உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களின் திறமையை உணர்ந்து அவர்களை ஊக்கப்படுத்துதல் வேண்டும் என்றார் .குழந்தைகளின் வெற்றியானது பெற்றோர் வளர்ப்பதில் மட்டும் இல்லை பெற்றோர் சொல்லும் வார்த்தைகளில் இருக்கிறது என்றார்
மேலும் பாடுபட்டு படித்தால் வருவது கல்வி அல்ல ,ஈடுபட்டுப் படிப்பது தான் கல்வி என்று கூறுகிறார் .
2011-2012 கல்வியாண்டில் டாக்டர் .கு.ஞானசம்பந்தம் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார் அவர் தம் உரையில் ..
கல்வி என்பது பண்பாடு சார்ந்தது .குழந்தைகளிடம் பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும் .இனிய,எளிய கதைகளைக்க கூறி அவர்களின் மனதைப் பண்படுத்த வேண்டும் . மாணவர்கள் உள்ளம்
உயர்ந்தால் ,வாழ்வு உயரும் .பெற்றோர்களும்,
ஆசிரியர்களும் மாணவர்களின் தகுதிக்கேற்ப இறங்கிப் பழகுதல் வேண்டும் .
குழந்தைகளைப்
பாராட்டுங்கள் :புகழ்ந்து பேசுங்கள்;ஊக்கப்படுத்துங்கள் என்று உரையாற்றினார் .
2012-2013 கல்வியாண்டில் லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார் .அவர் தம்
உரையில் ..
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
அதுதான் ஒரு மாணவனுக்கு அடிப்படைக்
கல்வி .ஆசிரியர்கள் கண்டிப்பாக இருப்பது மாணவர்களின் நல்வாழ்வுக்குத்தான் அதே சமையத்தில் அன்போடு அரவணைக்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
2013-2014 கல்வியாண்டில் சொல்வேந்தர் .சுகிசிவம் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார் .அவர் தம் உரையில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் .அதிக நேரத்தைக் கழிக்க வேண்டும் .வாழ்கைக்குத் தேவையானவற்றைக் கற்றுக்கொடுப்பது தான் கல்வி .
அக்கல்வியைக் கற்றுத்தரும் ஆசிரியர் என்பது பணியல்ல அது புனிதமான உறவு அந்த உறவோடு மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் ஆசிரியர்கள் .மாணவர்கள் திறமைமிக்கவர்கள் அவர்களது கனவை நனவாக்கச் செய்யுங்கள் அவன் வெற்றியாளனாவான் என்று
கேட்டுக்கொண்டார்
2014-2015 கல்வியாண்டில் திரு. கிருஷ்ணராஜ் வானவாராயர் . சிறப்பு விருந்தினராக வருகை தந்தார் .அவர் தம் உரையில் ... ஒவ்வொரு மாணவனும் தன்னை முதலில் உயர்த்திக்கொள்ள வேண்டும் .பின் சமுதாயத்தை உயர்த்தப் பாடுபட வேண்டும் .
உண்மையான கல்வி என்பது அதிக மதிப்பெண் வாங்குவது மட்டுமல்ல பரிட்சையில் பெயிலானும்(தோல்வி)பரவாயில்லை.வாழ்க்கையில் பாஸ் ஆக (வெற்றி) வேண்டும். பெற்றோர்கள் வீட்டில் கற்றல் சூழலை ஏற்படுத்த வேண்டும்.குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் இணைந்து செயல் பட வேண்டும் என்று கூறினார்
2014-2015 கல்வியாண்டில் திரு .தமிழருவி மணியன் . சிறப்பு விருந்தினராக வருகை தந்தார் .அவர் தம் உரையில் ...பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள் ,ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர்கள் மாணவர்கள் நாம் பெறாமல் பெற்றெடுத்த பிள்ளைகள் என்ற தாய்மை உணர்வோடு கற்பிக்க வேண்டும் .பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் என்ற முக்கூடலில் தான் அற்புதமான சமூகம் உருவெடுக்கிறது .பெற்றோர்களே கண்முன் அன்றாட தரிசிக்கும் கடவுள்கள் .எண்ணங்கள் மனிதனை உருவாக்குகின்றன .மனிதனின் எண்ணங்களால் உலகம் உருவாகின்றது.என்று அறிவுரை வழங்கினார் .
Previous
Next